கோவிட் பயணம் (3)

கோவிட் பயணம்

ஊருக்கு போக வேண்டும் என்றால் முடிவு எடுத்தால் மட்டும் போதுமா.. அதுக்கான பிளான் பண்ணணுமே. முதலில் விடுமுறைக்கு மேலதிகாரியிடம் அனுமதி பெறுதல் அவசியமான ஒன்று. லீவு கேக்கும் போது தான் நாம இருக்குறதே தெரியும், அப்ப தான், நாம இல்லைன்னா எப்படி வேலை நடக்கும் அப்படின்னு நம்மளோட முக்கியத்துவத்தை நமக்கே சொல்வாங்க. நானும் என்னோட மேலதிகரியாயிடம் போனேன்.
“சார், ஒரு சின்ன விண்ணப்பம்”
“ம்ம்...”
“ஊருக்கு போய் குடும்பத்தை கூட்டிட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன் சார்”
“எப்ப?”
“இந்த வாரம் சனிக்கிழமை சார்”
“இந்த வாரம் வேலை இருக்குப்பா”
“சார்...’
“ஆமா. நான் ஏற்கனவே பேசி உன்னோட பேரைக் கொடுத்துட்டேன்”
“சார்..” இந்த சாரில் ஒரு சோகம் தான் இருந்தது. அவரும் தொடர்ந்தார்.
“இண்டர்வியூ பேனலில் உன்னோட பேரை சேத்துக்க சொல்லி இருக்கிறேன். இந்த வாரம் சனிக்கிழமை வரைக்கும் உனக்கு வேலை இர…
[18:31, 07/07/2020] S. Dinesh Kannan: கோவிட் பயணம் 
தாமதமாய் வரும் என்று சொன்ன, அந்த விமானம் கண் முன்னே வந்து இறங்குவதைப்பார்த்தால் சந்தோசம் வராதா என்ன. விமானத்தில் ஏறுமுன் போதுமான பாதுகாப்பு கவசங்களை அணிய வைத்து எங்களை அழகு பார்த்து சமூக இடைவெளியுடன் விமானத்திற்குள் பிரவேசிக்க வைத்தனர். விண்வெளி வீராங்கனைகளாய் அந்த பணிப்பெண்களை பார்த்ததும், வேற்று கிரகத்திற்கு பயணம் செய்யும் ஒரு பீல். முகத்தில் மாஸ்க் என்ற முககவசத்துடனும், அதன் மேல் பயோ- ஷீல்ட் என்னும் இன்னொரு கவசத்துடனும் அமர, அந்த விமானம் தனது பயணத்தை 15 நிமிடங்கள் தாமதமாய் தொடங்கியது. எப்படியும் சீக்கிரம் போய் விடாதா என்ற நம்பிக்கையுடன் கடிகாரத்தையும், அந்த மேக கூட்டம் கலந்த வானத்தையும் பார்த்து கொண்டே இருந்தேன். 

ஒரு வழியாய் 15 நிமிட தாமதத்துடன், விமானம் கொல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஏதோ இறங்கியதும் லக்கேஜ் கூட எடுக்காமல் வீட்டுக்கு போவது போல், தனி மனித, சமூக இடைவெளி எல்லாம் நினைவில் இல்லாமல் பயணிகள் எல்லாரும் வரிசையில் நிற்க தொடங்கினர். எனக்கும் முன்னால் போக ஆசை தான். ஆனாலும், கொரானா பயத்தில் என்னுடைய இருக்கையிலே இருந்து விட்டேன். வழக்கமாகவே கடைசியாய் இறங்கும் பழக்கம் இருந்ததால், மக்களின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். நன்றாய் பொழுது போனது. ஒரு வழியாய் இறங்கி, அங்கிருந்த விமான நிலைய ஊழியர்களிடம் எனக்கு தெரிந்த அரை குறை இந்தியில் வழி கேட்டு, அவசரமாய், பாதுகாப்பு பரிசோதனையை முடித்தேன். 
கேட் நம்பரை தெரிந்து கொள்ள, அறிவிப்பு பலகையை பார்த்தேன். அதுவும் இந்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. முதல் விமானம் மும்பை செல்ல தயாராய் இருப்பதாய் சொல்ல, எனது போர்டிங் பாஸ் எடுத்து, வண்டி எண்ணை பார்க்க, அது வேறு எண்ணாய் இருக்க, அப்படியே கீழே பார்த்தேன். எட்டாவது இடத்தில், நான் செல்ல இருக்கும் விமானம், பாதுகாப்பு சோதனை என்ற அறிவிப்போடு இருந்தது. இன்னும் 50 நிமிடங்கள் இருக்க, நான் மெதுவாய் கேட் நம்பர் 105ஐ அடைந்தேன். நேரம் இருப்பதால், மனைவியிடம் பேச ஆரம்பித்தேன். அப்போது ஒலி அறிவிப்பில் எனது விமான தடம் எண் சொல்ல, ஒரு வினாடி எனக்கே புரிய வில்லை. போனை நிறுத்தி, கவுண்டரில் போய் எனது பாஸை காட்டி கேட்க, அவர்களும் அதே விமானம் என்று சொல்ல, குழப்பத்துடன் நான், காத்திருந்த பஸ்ஸில் ஏறினேன். எப்படியோ மும்பை போனால் சரி தான், வேறு எங்கும் போகாமல் இருக்க வேண்டும் என்று பஸ்ஸில் உடன் இருந்தவர்களிடம் உறுதி செய்து கொண்டு, விமானத்தில் நுழைந்தேன். இங்கும் விண்வெளி வீராங்கனைகளாய் பணிப்பெண்கள். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் அருகில் ஏற்கனவே ஒருத்தர் இருந்தார். அவரும் விண்வெளி வீரராய், முழு பாதுகாப்புடன் இருந்தார். அவர் அருகில் அரைக்கை சட்டையுடன், கிளைவுஸ் எதுவும் இல்லாமல் பக்கத்திலே இருக்க கூச்சப்பட்டேன்.
சுற்றுமுற்றும் பார்த்தேன். மொத்தமாய் ஒரு 15 பேர் தான். இன்னும் சிலர் வருவர் என்று நினைத்த போது தான் முன் சீட்டில் இருந்த ஒருவர் சொல்ல கேட்டேன். மும்பை பயணம் செய்ய எல்லாரும் பயப்படுவதாகவும், அதனால் தான் இரு விமானங்களை ஒன்றாய் சேர்த்து இருப்பார்கள் என்றும், அப்படியும் 15 பேர் தான் என்பதால், நாளை விமான பயணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று பேசினார். யாரிடம் பேசுகிறார் என்று கூர்ந்து கவனித்தால், அவர் மொபைலில் வீடியோ செய்து ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்தார். மறு நாள் ஏதோ செய்தி சேனலில் வர வாய்ப்பு இருப்பதாய் என் உள் மனம் சொன்னது.

ஒரு வழியாய் விமானம் கிளம்பியது. நான் சீக்கிரம் போக வேண்டும் என்று நான் முன்னால் வேண்டிய வேண்டுதலோ என்னவோ, இந்த விமானம், அரை மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் அடைந்தது. விமானத்தில் இருந்து கொண்டே ஓட்டுனரை அழைக்க, அவரோ, இன்னும் 30 நிமிடம் ஆகும் என சொன்னார். அது வரை என்ன செய்வது என்று யோசித்த படியே கடைசியாய் இறங்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் இருக்கும் 15 பேரில் என்ன கடைசி என்பது போல், எல்லாரும் இறங்க, நான் மெதுவாய் நகர்ந்தேன். எனக்கு முன்னால் ஒரு வயதான தம்பதியினர் இறங்குமுன், லக்கேஜ் எடுக்க மேலே தேடிக்கொண்டு இருந்தனர். நான் சற்றே அவர்களை விட உயரம் என்பதால் மெதுவாய் மேலே தேடினேன். எந்த லக்கேஜும் தென் பட வில்லை. அந்த வயதான பெண்மணி இன்னும் தேடுவதைப்பார்த்து நான் இன்னும் அருகில் போய் எட்டி பார்க்க, என் கண்களில் வாக்கிங் ஸ்டிக் தென்பட்டது. அதை எடுத்து அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க, அவர்களும் நன்றி சொல்லி முன்னால் நகர்ந்தனர். நானும் மெதுவாய் நகர்ந்து வரும் பொது, விமான பணிப்பெண் என்னை நிறுத்தி, என் கையில் சானிடைஸரை கட்டாயப்படுத்தி போட்ட பின்பு தான் வாக்கிங் ஸ்டிக்கில் நான் வைத்ததும் கொரானாவும் நினைவுக்கு வந்தது. மனித நேயம் இன்னும் மறைய வில்லை என்ற எண்ணத்தில், என் நன்றியை புன்னகையாய் சொல்லி, நகர்ந்தேன் நான்.

ஒரு வழியாய் காரில் அமர்ந்த பின்பு தான், நிம்மதிப்பெருமூச்சு எனக்கு. வீட்டில் இருந்து வந்த உணவை சாப்பிடும் போது அதுவும், 95 நாட்கள் கழித்து சாப்பிடும் போது இனம் புரியா சந்தோசம். மூன்று மணி நேர பயணத்திற்கு பின், இரவில் 12 மணிக்கு ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம். மறு நாள் சாம்பிள் எடுத்து, அதற்கு மறு நாள் ரிசல்ட் நெகடிவ் என சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் நான். வீட்டு தனிமை என்பதால் மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க மட்டுமே முடிந்தது. பார்த்ததிலும் சந்தோசமே. இன்னும் மாடியில் இருந்து குழந்தைகளிடம் சத்தமாய் பேசுவதில் தான் என்ன ஒரு மகிழ்ச்சி. 
“அப்பா..” என்ற சத்தம் கேட்டு பால்கனி வந்து,
“என்னடா?” என்று நான் கேட்க,
“நான் குளிக்க போறேன்” என்று மகன் சொல்வதை கேட்கும் போதே இன்னொரு குரல்,
“ஏன், உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு தான் குளிக்க போவியோ?”
“ஆமா... சொல்லிட்டு தான் போவேன்” என்று பதில் சொல்ல,
“குளிச்சிட்டு வாடா என் செல்ல குட்டி” என்று மேலிருந்தே சொல்லும் போது புரிகிறது, இதுவும் ஒரு விதமான ஆனந்த வாழ்க்கையே...

Comments