கோவிட் பயணம்
இந்த கண்ணுக்கு தெரியாத கோவிட்-19 வந்துச்சின்னு சொன்னதும் சொன்னாங்க. எல்லார் மனசுலயும் ஒரு பீதியும் பயமும் கிளம்பினது என்னவோ உண்மை தான். வெளியே என்ன தான் பில் டப் குடுத்தாலும், எனக்கும் உள்ளுக்குள்ள ஒரு ஓரமா சொல்ல முடியாத பயம் இருக்க தான் செஞ்சது.
இந்த கேப்பில, ஆபீஸ்ல இருந்து டிரான்ஸ்பர் வேற, அதுவும் எங்கோ இருக்குற அருணாசல பிரதேசத்துக்கு. நல்லவன்னு காட்டுறதுக்காக, நானும் கிளம்புறேன்னு சொல்லி முடிவு பண்ணிட்டேன். அருணாசல பிரதேசத்துக்கு போய் வேலை செய்யுற ஊரைப்பாத்துட்டு அப்படியே பசங்களுக்கு ஸ்கூலும், வீடும் பாத்து அப்புறமா ஊருக்கு வந்து குடும்பத்தை கூட்டிட்டு போறதா ஒரு பிளான். பதினைஞ்சு நாளைல பசங்களை அருணாசல பிரதேசத்துக்கு கூட்டிட்டு போறதா அவங்ககிட்டயும் சொல்லி வைச்சிட்டேன்.
நம்ம பிளான் என்னைக்கு தான் நினைச்ச படி நடந்து இருக்கு. போன மூணாவது நாளே லாக்-டவுன் ஆரம்பிச்சிது. எங்கேயும் போகாம வீட்டுக்குள்ளே 21 நாள். முதல்ல ஜாலியா தான் இருந்துச்சி. லாக்-டவுன் -2 அப்படின்னு சொல்லி, காஞ்சனா கணக்கா நம்பர் கூடிட்டே போச்சிது. அப்பப்ப, கை தட்டி, விளக்கை அணைச்சி, விளக்கேத்தி லாக்-டவுனை அந்த அருணாசல பிரதேசத்தோட சேர்ந்து நானும் கொண்டாடினேன். லாக்-டவுன் -4 வரைக்கும் வந்தாச்சி, ஆனா, ஊருக்கு போறதுக்கு எந்த வழியும் பிறக்குற மாதிரி தெரியலை....
நாளாக நாளாக, பசங்க மெதுவா கேக்க ஆரம்பிச்சாங்க, “அப்பா, எப்ப வருவீங்க?” அப்படின்னு. என்னமோ பாசமா தான் கேக்குறாங்களோன்னு நினைச்சா, பின்னாடி தான் தெரிஞ்சுது, அவங்க அம்மா திட்டும் போது மட்டும் தான் அப்பா நினைப்பு அவங்களுக்கு வருதுன்னு. அதையும் அவங்களே சொல்லும் போது, இதுக்கு அப்புறமும் ஊருக்கு போகாம இருந்தா நம்மளையே மறந்துருவாங்களோன்னு இன்னொரு பயம் வேற.
அப்ப தான் இந்த அன்லாக்-1 அப்படின்னு காஞ்சனா ரிவர்ஸ் கியர்ல போற மாதிரி ஒரு புது அறிவிப்பு. அப்பாடா. ஊருக்கு போறதுக்கு வழி பிறந்ததா ஒரு சந்தோசம். நார்மலா ஊருக்கு போணும்னா டிக்கெட் புக் பண்ணினோமா, போனோமான்னு இருப்போம். இப்ப அப்படி இல்லியே. அருணாசலப்பிரதேசத்துல இருந்து குடும்பம் இருக்குற சில்வாச வரதுக்குள்ள பல மாநிலங்களை கடக்க வேண்டிய கட்டாயம். அதுவும் இந்த அன்லாக்-1 ல, மாநில அரசு அவங்க தேவைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்ன்னு வேற சொல்லிட்டாங்க. என்ன பண்றது? எப்படி ஊருக்கு போறதுன்னு தெரியலை. அதிலயும் போறதா வேண்டாமான்னே ஒரு குழப்பம். தெரியாத இடத்துல போய் குவாரண்டைன் அப்படின்னு ரெண்டு வாரம் இருக்குறதுக்கு தெரிஞ்ச அருணாசலே பரவாயில்லை அப்படிங்கிற மாதிரியும் தோணிச்சி. எதுக்கும் நம்ம அருணாசல பிரதேசத்தில் மருத்துவ துறை அலுவலரை கேட்டுக்கலாம்ன்னா, அவரும் ஒரு அரசாங்க அதிகாரியா அருணாசல பிரதேசத்துல என்ன வரைமுறைன்னு மட்டும் தான் சொல்றாரே தவிர, அடுத்த மாநிலத்து வரைமுறை எல்லாம் அவங்களை தான் கேக்கணும்ன்னு தெளிவா சொல்லிட்டாரு.
இந்த மாதிரி குழப்பமான நேரத்துல நண்பர்களுடன் பேசினால் மனசுக்கு ஆறுதலா, வழி சொல்லுவாங்கன்னு நம்பி பல பேர் கிட்ட பேசினேன். கொஞ்ச பேர் போகலாம்ன்னு சொன்னாங்க. நிறைய பேர் இன்னும் பயமுறுத்துனாங்க. எல்லாத்தையும் கேட்டுட்டு, என்ன ஆனாலும் சில்வாசா போறதுன்னு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தேன்.
(தொடரும்......)
Comments
Post a Comment